×

நிமிலச்சேரி- கமலாபுரம் இடையே கற்கள் பெயர்ந்த சாலையால் வாகன ஓட்டிகள் கடும் அவதி

நீடாமங்கலம்,பிப்.27: கூத்தாநல்லூர் அருகில் நிமிலச்சேரி-கமலாபுரம் இடையிலான கப்பி சாலையை தார்சாலையாக மாற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் தாலுகா மன்னார்குடி ஒன்றியம் மூலங்குடியிலிருந்து வடபாதிமங்கலம் செல்லும் சாலையில் நிமிலச் சேரியிலிருந்து  கமலாபுரம் செல்லும் சாலையை  கடந்த 7 மாதங்களுக்கு முன் தார்சாலையாக மாற்ற கப்பி போட்டு சிகப்பு அரலை அடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.அதிலிருந்து பணிகள் தொடங்காமல் அந்த பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்த சாலை வழியாக புனவாசல், வெங்காரம் பேரையூர், வடபாதி உள்ளிட்ட கிராமங்களுக்கும் அங்குள்ள தனியார் வங்கிக்கும்,புனவாசல் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும்,வெங்காரம் பேரையூர் அரசு நடுநிலைப் பள்ளிக்கும் இந்த சாலையில் தான் மாணவ, மாணவிகள் பொது மக்கள் என தினந்தோறும் அப்பகுதியில் வசிப்பவர்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் சென்று வருகின்றனர்.

இச்சாலையில் கப்பிகள் பெயர்ந்துள்ளதால் இரு சக்கர வாகனஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.பள்ளி மாணவ, மாணவிகள் சாலையில் சென்று வரும் போது கால் மற்றும் சீருடைகளில் சிகப்பு மண் ஒட்டி சிரமப்படுகின்றனர்.எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் கொண்டு மக்கள்  மற்றும் மாணவ, மாணவிகள் நலன் கருதி விரைவில் தார்சாலை பணியை தொடங்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : road ,Nimalilacherry-Kamalapuram ,
× RELATED குமுளி மலைச்சாலையில் வந்த போது பிரேக்...